விளாத்திகுளம் அருகே நவராத்திரி உற்சவ விழாவை முன்னிட்டு நரகாஅசுரனை வதம் செய்த ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன்!
கொட்டும் மழையில் விண்ணை பிளந்த மின்னல்களுக்கு இடையே வானவேடிக்கையுடன் நடைபெற்ற சூரசம்காரம்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புதூரில் அமைந்துள்ள ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவில் நவராத்திரி உற்சவ விழா குத்துவிளக்கு பூஜைகளுடன் தொடங்கியது, அதனைத்தொடர்ந்து 18-10-2026 ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் நரகா அசுரனை வதம் செய்யும் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.
நிகழ்ச்சியை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனை நடைபெற்றது, பின்னர் கோவில் வளாகத்தில் இருந்து பெண்களின் நாதஸ்வர மங்கல இசை மற்றும் வான வேடிக்கையுடன் ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கையில் சூலத்துடன் நரகாஅசுரனை வதம் செய்யும் நிகழ்வு புதூர் முக்கிய விதி வழியாக சுற்றி வந்து புதூர் காவல் நிலையம் முன்பாக நரகாஅசுரனின் தலையை சூலத்தால் வதம் செய்யும் நிகழ்ச்சி நிறைவடைந்தது.
சிங்கமுக வாகனத்தில் தவத்திலிருந்து ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மனையும் அவரது தங்கை துர்க்கையம்மனையும் வம்பிழுத்த நரகாசுரன் கூட்டத்தை, கொட்டும் மழையிலும் விண்ணைப் பிளந்த மின்னல்களுக்கு இடையே ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் வதம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது.
கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஏராளமான பொதுமக்கள் சூரசம்கார நிகழ்ச்சியை கண்டுகளித்தனர்.