மது போதையில் விளாத்திகுளம் காவல்துறையினரை தாக்கிய அதிமுக நிர்வாகி கைது!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள குமாரபுரம் கிராமத்தைசேர்ந்த பால்சாமி என்பவரின் மகன் அறிவழகன் (42), அதிமுகவில் முக்கிய பொறுப்பு வகித்து வரும் அறிவழகன், விளாத்திகுளம் காமராஜர் நகர் பகுதியில் தற்போது வசித்து ரியல் எஸ்டேட், கந்துவட்டிக்கு பணம் விடுவது,நிலத்தை அபகரிப்பது உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் செய்து வந்த அறிவழகன்,கடந்த ஓராண்டுக்கு முன்பு ஒரு பெண்ணுக்கு வேலை வாங்கித்தருவதாக ஆசை வார்த்தை கூறி, அந்தப்பெண்ணை அழைத்துச்சென்று பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி, அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் எனக்கூறி அந்தப் பெண்ணையும்,அந்த தொழிலதிபரையும் மிரட்டி பணம் பெற்ற விவகாரம் விளாத்திகுளம் பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது.
இதனைத்தொடர்ந்து அந்தப் புகார் குறித்து அப்போது இருந்த DSP அசோகன் அறிவழகனிடமிருந்து சுமார் 5 லட்சம் ரூபாய் கையூட்டு பெற்று, அந்த புகாரை கண்டுகொள்ளாமல் விட்டார்.
இந்நிலையில் காடல்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கந்து வட்டிக்கு பணம் கொடுத்து நிலத்தை அபகரிக்க முயற்சித்த போது ஏற்பட்ட பிரச்சனையில் அறிவழகன் ஒரு பெண்ணை தாக்கிய வழக்கு மற்றும் கொலை முயற்சி செய்த வழக்கு என இரண்டு வழக்குகள் ஒரு வாரத்திற்கு முன்பு காடல்குடி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டது, இந்த இரண்டு வழக்குகளுக்கும் முன் ஜாமின் தேடி வந்த அறிவழகன்,நேற்று 14-07-2026 செவ்வாய்க்கிழமை விளாத்திகுளத்தில் உள்ள ஒரு முக்கிய பிரமுகரை மது போதையில் செல்போனில் தொடர்பு கொண்டு, ஜாதியை கூறி மிரட்டி, எனக்கு எந்தவித அரசு ஒப்பந்தமும் கொடுக்காத உன்னை வெட்டாமல் விடமாட்டேன் என்று கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து அந்த அரசியல் பிரமுகர் விளாத்திகுளம் போலீசாரிடம் தன்னை அறிவழகன் செல்போனில் வெட்டி விடுவேன் என்று கொலை மிரட்டல் விடுவதாக புகார் தெரிவித்துள்ளார், இதனைத்தொடர்ந்து புகாரின் பேரில் விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் விளாத்திகுளம் காமராஜர் நகர் பகுதியில் உள்ள அறிவழகன் வீட்டுக்கு சென்று விசாரிக்க சென்ற போது, மது போதையில் இருந்த அறிவழகன் விசாரணைக்கு வந்த போலீசாரை தாக்கி, அறிவாலை காட்டி கொலை மிரட்டல் விடுத்து, போலீஸ்னா நீங்க என்ன பெரிய ------------------ என்று கூறி ஆபாச சொற்களை கூறி மீண்டும் போலீசாரை தாக்க முயன்றுள்ளார்.
இதனைத்தொடர்ந்து அங்கிருந்த மற்ற காவலர்கள் மற்றும் பொதுமக்கள் அந்த காயம் ஏற்பட்ட உதவி ஆய்வாளரை விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இதனைத்தொடர்ந்து காவல் உதவி ஆய்வாளர் தாக்கிய அறிவழகனை கைது செய்ய 10-க்கும் மேற்பட்ட போலீசார் முயன்ற போது விளாத்திகுளம் DSP சுந்தரபாண்டியன் அறிவழகனிடம் பணம் கையூட்டு பெற்று அறிவழகனை கைது செய்ய வேண்டாம் என எனக்கூறியதால், காவல்துறையினர் கைது செய்யும் நடவடிக்கையில் அறிவழகனை பின் வாங்கினர்.
இதனைத் தொடர்ந்து பணியில் இருந்த காவல் உதவி ஆய்வாளரை மதுபோதையில் தாக்கிய நபர் மீது கைது நடவடிக்கை எடுக்காத விஷயம் நெல்லை தென் மண்டல டிஐஜி திருநாவுக்கரசுக்கு சென்ற நிலையில், விளாத்திகுளம் டிஎஸ்பி சுந்தரபாண்டியனை செல்போனில் தொடர்பு கொண்ட டிஐஜி திருநாவுக்கரசு, காவல் பணியில் இருந்த நமது உதவி ஆய்வாளரை ஒருவன் மது போதையில் தாக்கி அரிவாளை எடுத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளான். அறிவழகன் மீது நடவடிக்கை எடுக்காமல் அவனிடம் கையூட்டு பெற்று காவல்துறையின் மாண்பை நீங்கள் சீர்குலைத்து உள்ளீர்கள் என்று டிஎஸ்பி சுந்தரபாண்டியனை டிஐஜி திருநாவுக்கரசு "லெப்ட் ரைட்" வாங்கியதாக கூறப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து காரில் தப்பிக்க முயன்ற அறிவழகனை,மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனிப்பிரிவு போலீசார் அதிகாலை 2 மணி அளவில் குறுக்குசாலையில் வைத்து சுற்றி வளைத்து கைது செய்து விளாத்திகுளம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
பின்னர் 15-07-2026 புதன்கிழமை காலை 11:30 அறிவழகனை போலீசார் புடை சூழ விளாத்திகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவில்பட்டி சிறை சாலையில் அடைத்தனர்.
கந்துவட்டி,நில அபகரிப்பு, பெண்ணின் கண்ணியத்திற்கு பங்கம் உள்ளிட்ட அறிவழகன் மீது பல்வேறு புகார்கள் வந்தாலும் காவல்துறைக்கு பணம் கொடுத்து சரி செய்யும் அறிவழகன் மீது எந்த நடவடிக்கை எடுக்காததன் காரணமாக இன்று காவல்துறையினர் மீது அறிவழகன் கை வைத்தது பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.