அதிமுக வேட்பாளர் சத்யா விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் புதுமுகமாக போட்டியிடும் சத்தியா விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் முன்னிலையில், விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் உஷாவிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
அதிமுக வேட்பாளர் சத்யாவின் வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பரிசீலனை செய்தனர்.
விளாத்திகுளம் அதிமுக வேட்பாளர் சத்யா இதற்கு முன் மாவட்ட கவுன்சிலராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.