அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்த விளாத்திகுளம் திமுக வேட்பாளர் மார்கண்டயேன்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் சார்பில் போட்டியிடும் மார்கண்டயேன் இன்று அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரான உஷாவிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.
இதனைத் தொடர்ந்து வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பரிசீலனை செய்தனர்.
தற்போதைய விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினரும் விளாத்திகுளம் திமுக வேட்பாளருமான மார்க்கண்டேயன் 2011-ம் ஆண்டு அதிமுக சார்பில் வெற்றி பெற்றார், அதனைத் தொடர்ந்து 2019 நடைபெற்ற இடைத்தேர்தலில் சுயேட்சையாக நின்று தோல்வியுற்றார், மீண்டும் 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார், தற்போது மீண்டும் 2026 சட்டமன்றத் தேர்தலில் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளராக போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.