விளாத்திகுளம் அருகே மது போதையில் நண்பரை அடித்துக் கொலை செய்தவர் கைது.
தூத்துக்குடி விளாத்திகுளம் அருகே உள்ள தருவைகுளம் கடற்கரை பகுதியில் காரைக்குடி கிராமத்தைச் சேர்ந்த ஆனந்த்(33) என்பவரை மது போதையில் ஏற்பட்ட தகராறில் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது நண்பரான புதுக்கோட்டை மணல்மேல் குடி பகுதியை சேர்ந்த ரகுபதி என்பவரை (38) தருவைக்குளம் காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.