விளாத்திகுளம் அருகே தேமுதிக கொடி நாள் 25-ம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு அன்னதானத்துடன் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.



தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்-ன் வேண்டுகோளை ஏற்று தூத்துக்குடி வடக்கு மாவட்ட தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் விளாத்திகுளம் அருகே உள்ள கீழ‌ ஈரால் கிராமத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமையில், கொடி நாள் 25-ம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு கழகத்தின் கொள்கைகள் மற்றும் கொடி விளக்க மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக தேமுதிக தேர்தல் பணிக்குழு செயலாளர் தாமோதரக்கண்ணன் கலந்து கொண்டு கட்சியினர் மற்றும் பொதுமக்களிடையே சிறப்புரையாற்றினார். அப்போது, கட்சியினரிடம் கழகத்தின் பொதுச் செயலாளர் பிரேமதா விஜயகாந்த் தலைமையில் தேமுதிக இணையும் கூட்டணியை தேர்தலில் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அத்தோடு பொதுமக்கள் அனைவரும் தேர்தலில் வாக்கிற்கு பணம் வாங்காமல் வாக்கு செலுத்த வேண்டும் என்றும், தேசிய கல்விக்கொள்கையைப் பற்றி பேசி திராவிட முன்னேற்றக் கழகத்தை விமர்சனம் செய்தார்.    இந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில், இக்கூட்டத்தில் கோவில்பட்டி கிழக்கு ஒன்றியசெயலாளர் பொன்ராஜ் சத்தியமூர்த்தி வரவேற்று பேசினார்கள் இதில் மாவட்டஅவைதலைவர் கொம்பையாபாண்டியன், மாவட்ட பொருளாளர் ராஜன், மாவட்டதுணைசெயலாளர் ராஜபாண்டி, செயற்குழுஉறுப்பினர் பிரபாகரன், பொதுகுழுஉறுப்பினர் முருகன் காளிதாஸ், ஒன்றியசெயலாளர்கள் விளாத்திகுளம் கிழக்கு தங்கச்சாமி,மேற்கு மாரியப்பன் புதூர் மேற்கு ஆறுமுகபெருமாள, கயத்தார் மேறௌகு நடராஜன் கயத்தார் கிழக்கு அருன், ஒட்டபிடாரம் ஜெயக்குமார், நகரசெயலாளர்கள் கோவில்பட்டி நேதாஜிபாலமுருகன்,கயத்தார் கண்ணண், விளாத்திகுளம் கோட்டைச்சாமி, எட்டையாபுரம் செல்வம் மாவட்டகேப்டன் மன்ற செயலாளர் முத்துமாலை, துணைசெயலாளர்கள்  மேகலிங்கம், குவாளிஷ்ராஜ், அந்தோணி, மாவட்டமகளிரணி செயலாளர் வெண்ணிலா, மாவட்ட இளைஞரணி துணைசெயலாளர் லட்சுமணண்,பிச்சைமணி சமுகவளைதள அணி ராமராஜ், மாணவரணி ராமர் தொண்டரணி முத்துக்குமார், தங்கமணி மாவட்ட தொழிற்சங்கதலைவர் மீனாட்சிசுந்தரம் மற்றும் கிழக்கு ஒன்றியநிர்வாகிகள் சுரேஸ்,மகேஸ்,கருத்தப்பாண்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர் கூட்டத்தில் முடிவில் ஒன்றியதுணைசெயலாளர் நாராயணண் நன்றிகூறினார்