59- பயனாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்ல திட்ட வேலை உத்தரவினை விளாத்திகுளம்  MLA  வழங்கினார்!


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட 26- ஊராட்சிகளை சேர்ந்த 59- பயனாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்ல திட்ட வேலை உத்தரவினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர்,சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வு குழு தலைவர்,தலைமை செயற்குழு உறுப்பினர் மார்கண்டேயன் வழங்கினார்.

உடன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரஞ்சித், தங்கவேல் விளாத்திகுளம் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி சமூக வலைதள அணி ஒருங்கிணைப்பாளர் கரண்குமார் உட்பட பொதுமக்கள்,துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.