தமிழக முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 101 வது பிறந்தநாள் விழா : விளாத்திகுளம் MLA மார்கண்டேயன் மரியாதை!
தமிழக முன்னாள் முதல்வர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 101 வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் திமுக சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு நன்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கலைஞர் கருணாநிதியின் திருவுருவப்படத்திற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டயேன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். இந்நிகழ்வில் விளாத்திகுளம் பேரூர் கழக நகர செயலாளர் வேலுச்சாமி, செயற்குழு உறுப்பினர் ராஜாக்கண்ணு, மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் பாண்டியராஜன், ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, அன்புராஜன், ராதாகிருஷ்ணன், விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி திமுக தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.