எட்டையாபுரம் அருகே உள்ள  இளம்புவனம் கிராமத்தில் திமுக அரசைக் கண்டித்து பாஜக சார்பில்   தூத்துக்குடி வடக்கு மாவட்ட  உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாவட்ட செயலாளர் சங்கரலிங்கம் தலைமையில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  தி.மு.க. அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும், டாஸ்மாக் மதுக்கடையை மூட வேண்டும், ஆறுகளின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும், மின் கட்டணத்தை குறைக்க வேண்டும், அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூ.1000 /- வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பாஜக சார்பில் தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் அருகே உள்ள   இளம்புவனம் கிராமத்தில்  திமுக அரசைக் கண்டித்து பாஜக சார்பில்   தூத்துக்குடி வடக்கு மாவட்ட  உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாவட்ட செயலாளர் சங்கரலிங்கம், தலைமையில் , ஒன்றிய பொதுச்செயலாளர் ஆட்டோ காளிராஜ் முன்னிலையில்ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .இந்நிகழ்ச்சியில் பாஜக   கிளைத் தலைவர் தளவாய்சாமி ஒன்றிய  வழக்கறிஞர் அணி தலைவர் பாலமுருகன் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஹரிஹரன் மகளிர் அணிநிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்