ஓட்டப்பிடாரம் அருகே சாலை விபத்தில் பெண் பரிதாபமாக உயிரிழப்பு.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள பசுவந்தனை ராஜூ நகர் பகுதி சேர்ந்தவர் பரமசிவன் (47) இவரது மனைவி முத்துமாரி (40), கணவன் மனைவி இருவரும் பசுவந்தனையிலிருந்து கோவில்பட்டிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில்,முத்துமாரி படுகாயம் அடைந்து கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டார்.
ஆனால் சிகிச்சை பலனின்றி முத்துமாரி பரிதாபமாக உயிரிழந்தார், லேசான காயம் அடைந்த பரமசிவம் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து பசுவந்தனைக் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.