ஓட்டப்பிடாரம் அருகே  நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணியை MLA சண்முகையா தொடங்கி வைத்தார்.


தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள தென்னம்பட்டி - கோபாலபுரம் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 4 லட்சம் மதிப்பீட்டில் தரைதல நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணியினை, ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி கட்டுமான பணியினை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் கோபாலபுரம் திமுக கிளைச் செயலாளர் கனகராஜ், தென்னம்பட்டிகிளை செயலாளர், பண்டாரம் அரசு ஒப்பந்ததாரர் ஜோசப், இளைஞரணி பொன்ராஜ் பரமசிவன் மற்றும் ஊர் பொதுமக்கள் உட்பட ஏராளமான கலந்து கொண்டனர்.