கோவில்பட்டியில் காலை கடன் முடிக்க சென்ற  இளைஞர் வெட்டி கொலை!



தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள செண்பகப்பேரி கிராமத்தை சேர்ந்த செண்பகராஜ் என்பவரின் மகன் பாண்டியராஜ் (25), இவர் கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலையில் வழக்கம்போல ஊரின் அருகே உள்ள கண்மாய்க்கு  காலைக்கடன் முடிக்க சென்ற போது, அங்கு வந்த மர்ம நபர்கள் பாண்டியராஜை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. இதனை டுத்து தகவல் அறிந்த நாலாட்டின்புதூர் காவல் நிலைய போலீசார் பாண்டியராஜன் உடலை கைப்பற்றி பிரேத ஆய்வுக்காக கோவில்பட்டி தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, கொலைக்கான காரணம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.