தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள காற்றாலை நிறுவன வளாகத்தில் மின்விளக்குகள் அமைப்பதற்காக வைக்கப்பட்டிருந்த மின்கம்பங்களை, ஓட்டப்பிடாரம் மேலமங்கலம் பகுதியைச் சேர்ந்த ராபின்சிங்(24),ராஜன்(26), முத்துக்குமார்(40) ஆகியோர் திருடியது தெரியவந்தது, இதனை அடுத்து 3 பேரையும் கைது செய்த ஒட்டப்பிடாரம் காவல் நிலைய போலீசார் அவர்களிடமிருந்த ரூ.1,20,000 மதிப்புள்ள மின்கம்பங்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.