கோவில்பட்டி அருகே  காட்டுப்பகுதியில் இளம் பெண் சடலம் மீட்பு - காதலர் கைது - பரபரப்பு வாக்குமூலம்!



தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே  கஸ்தூரி ரங்காபுரம் காட்டுப்பகுதியில் இளம்பெண் இறந்த நிலையில் இருப்பதாக கழுகுமலை போலீஸாருக்கு  தகவல் கிடைத்துசம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டதில் அவர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தளவாய்புரத்தைச் சேர்ந்த வெள்ளைச்சாமி மகள் உமா (19) என்பதும், அவர் பாறைப்பட்டியில் உள்ள தனியார் கோச்சிங் சென்டரில் படித்து வந்ததும் தெரிய வந்தது. இதுகுறித்து கழுகுமலை போலீஸார் வழக்குப் பதிந்து சடலத்தை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இவ்வழக்கு தொடர்பாக உமாவின் ஆண் நண்பர்  தென்காசி மாவட்டம் குளக்காட்டாகுறிச்சி கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ் என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி என 



சடலமாக கிடந்த உமா மற்றும் ராஜேஷ் இருவரும் பாறைப்பட்டியில் உள்ள தனியார் கோச்சிங் சென்டரில்  காவலர் தேர்வுக்காக பயிற்சி பெற்று வந்துள்ளனர். தொடக்கத்தில் இருவரும் நண்பர்களாக பழகிய நிலையில் பின்னர் அது காதலாக மாறி நெருங்கி பழகி வந்துள்ளனர். உயிரிழந்த உமாவிற்கு இன்ஸ்டாகிராம்  சமூக வலைதளங்களில் கொஞ்சம் ஆர்வமாக இருந்து உள்ளார். இதனை ராஜேஷ் அவ்வப்போது கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கிடையே அவ்வப்போது பிரச்சனை எழுதுவதும், பின்னர் பேசி சமாதானம் செய்வதும் வாடிக்கையாக இருந்துள்ளது. 



அதே போன்று தான் கடந்த ஒரு வார காலத்திற்கு மேலாக இருவருக்கிடையே பிரச்சனை இருந்துள்ளது. இருவரும் பிரிந்து விடலாம் என்று உமா தெரிவித்ததாக கூறப்படுகிறது.  ஆனால் அவரை சமாதானப்படுத்தி விடலாம் என்று நினைத்த ராஜேஷ், நேற்று மாலை தனது பைக்கில் உமாவை அழைத்துச் சென்றுள்ளார். நடுவப்பட்டியில் இருந்து சிவகாசி செல்லும் சாலையில் கஸ்தூரி ரங்கபுரம் கிராமத்தை அடுத்து உள்ள காட்டுப் பகுதிக்கு சென்றதும் சிறிது நேரம் பேசி விட்டு செல்லலாம் என்று ராஜேஷ் கூற அதற்கு உமாவும் சம்மதம் தெரிவித்துள்ளார். இருவரும் காட்டுப் பகுதியில் அமர்ந்து பேசி உள்ளனர். தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி ராஜேஷ் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கு உமா  மறுத்ததாக தெரிகிறது. இவ்வளவு நாள் என்னை காதலித்து விட்டு தற்போது வேண்டாம் என்று சொல்கிறாயா இன்றைய ராஜேஷ் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம்  முற்றவே உமா வைத்திருந்த துப்பட்டாவை புடுங்கி அவரது கழுத்தில் இறுக்கி , கழுத்தை நெரித்து கொலை செய்ததாக கூறப்படுகிறது. ஆத்திரத்தில் கழுத்தினை நெரித்ததும் உமா இறந்தது தெரியாமல் மயக்கம் அடைந்து விட்டார் என்று நினைத்து, 108 ஆம்புலன்ஸ்க்கு ராஜேஷ் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் அருகில் இருந்த வெம்பக்கோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்ததாக தெரிகிறது. 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வந்து பார்த்தபோது உமா இறந்தது உறுதி செய்யப்பட்டது. 




உமா இறந்து கிடந்த இடம் வெம்பக்கோட்டை காவல் நிலையமா? திருவேங்கடம் காவல் நிலையமா? அல்லது கழுகுமலை காவல் நிலையமா? என தூத்துக்குடி விருதுநகர் தென்காசி என மூன்று மாவட்ட காவல் துறையினர் முதலில் குழப்பம் அடைந்தனர். பின்னர் உடல் கிடந்த நிலத்தின் அடிப்படையில் அது கழுகுமலை காவல் நிலைய எல்லைக்குள் வருகிறது என்று முடிவு செய்து பின்னர் உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கழுகுமலை போலீசார் ராஜேஷ்சினை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.