சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பெயரில் மீண்டும் கோவில்பட்டி  கால்நடை சந்தையை தொடங்க கோரிக்கை !

தூத்துக்குடி மாவட்டம்  கோவில்பட்டியில் சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பெயரில் செயல்பட்டு வந்த கால்நடை சந்தையை மீண்டும் தொடங்க கோரி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நற்பணி இயக்க தலைவர் நேதாஜி பாலமுருகன் மற்றும் நிர்வாகிகள்,  நேதாஜி சிலையுடன் சென்று நகராட்சி தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில்கோவில்பட்டி நகரில் பல ஆண்டுகளாக சுதந்திர போராட்டத் தலைவர் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் பெயரில் சிறப்பாக செயல்பட்டு வந்த கால்நடை சந்தையை மீண்டும் தொடங்கி நடத்தி வேண்டும். மேலும் நேதாஜிக்கு உருவச்சிலை அமைக்க வேண்டும், கடந்த 7 வருடங்களுக்கும் மேலாக இந்த கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு தருணங்களில் மனு அளித்து இருக்கிறோம், எந்த நடவடிக்கையும் இல்லை. அதனால் முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையிலும் நடக்க உள்ள நகராட்சி கூட்டத்தொடரில் அனைத்து நகராட்சி உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து தீர்மானம் கொண்ட வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது..


மேலும் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நேதாஜி சிலையை நகர் மன்ற தலைவருக்கு பரிசாக அளித்தனர்.