கோவில்பட்டியில் இருசக்கர வாகன விபத்தில் முதியவர் உயிரிழப்பு.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வள்ளுவர் நகர் பகுதியில் சேர்ந்தவர் காமாட்சி ராஜன் (60), இவர் தனது இருசக்கர வாகனத்தில் திருநெல்வேலி சாலையில் சென்று கொண்டிருந்தபோது, நாலாட்டினம் புதூர் பகுதி சேர்ந்த சரவணகுமார் (25), செல்வன்(21) ஆகியோர் ஓட்டி வந்த இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மூன்று பேரும் காயம் அடைந்தனர். மூன்று பேரும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்ட நிலையில், முதியவர் காமாட்சி ராஜன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.