கோவில்பட்டியில் இருசக்கர வாகனத்தை திருடியவர் கைது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி திருமலை நகர் பகுதியில் சேர்ந்த இசக்கி மகன் ராஜேந்திரன்(62), இவர் தனது வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் திருடு போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து ராஜேந்திரன் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் நடைபெற்ற விசாரணையில், இருசக்கர வாகனத்தை திருடிய கோவில்பட்டி வள்ளுவர் நகர் பகுதி கனகராஜ் என்பவரை கைது செய்து அவரிடம் இருந்த ரூ,75000 மதிப்புள்ள இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.