கோவில்பட்டி DSP வெங்கடேஷ் பணியிட மாற்றம்: புதிய DSP யாக ஜெகநாதன் நியமனம்!

கடந்த மூன்று ஆண்டுகளாக தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி DSP யாக இருக்கும் வெங்கடேஷ் வள்ளியூருக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி DSP யாக இருக்கும் ஜெகநாதன் கோவில்பட்டி புதிய DSP யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

புதிதாக பொறுப்பேற்றுள்ள DSP ஜெகநாதன் கோவில்பட்டியில் நீண்ட நாட்களாக உள்ள கந்துவட்டி பிரச்சனைகளை சரி செய்வாரா? என்று கோவில்பட்டி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.