கோவில்பட்டியில் விளையாட்டு வீரர்களுடன் ஆலோசனைக் கூட்டம் _ முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் பங்கேற்பு!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சங்கரலிங்கபுரம், மற்றும் வேலாயுதபுரம் நடைபெற்ற நிகழ்ச்சியில் விளையாட்டினை ஊக்கப்படுத்துதல் கலந்தாய்வு ஆலோசனைக் கூட்டத்தில் திமுக சார்பில் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு மின்னல் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி விளையாட்டு வீரர்கள் பயன்பெறும் வகையில் புதிய சீருடைகள் வழங்கினார்.
அத்துடன் கடந்த வாரம் இந்திய அளவில் இமாச்சல பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற 19 வயதிற்கு உட்பட்ட கபடி போட்டியில் தமிழக அணிக்காக விளையாடி வெண்கல பதக்கம் பெற்று வந்த கோவில்பட்டி கபடி வீராங்கனை விந்தியாவிற்கு பாராட்டுக்கள் தெரிவித்ததுடன் அவரது விளையாட்டுத் திறனை மேலும் ஊக்கப்படுத்தும் விதமாக புதிய விளையாட்டு உபகரணங்களை முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் வழங்கி சிறப்பித்தார், இந்நிகழ்வில் முன்னாள் கபடி வீரரும் மின்னல் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியின் ஆலோசகர் பரதன், அணியின் பயிற்சியாளர் சுரேஷ், வேல்முருகன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் துணை அமைப்பாளர் மாத்தையா, விளையாட்டு வீரர்களின் பெற்றோர்கள், விளையாட்டு வீரர்கள், உள்ளிட்டோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை சிறப்பித்தனர்.