கோவில்பட்டி அருகே பைக் திருட்டில் ஈடுபட்ட இளைஞர் கைது - 2 பைக்குகள் பறிமுதல் !
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள இளையரசனேந்தல் பகுதியில் கடந்த வாரம் 2 பைக்குகள் திருடு போனதாக மேற்குகாவல் நிலைய போலீசாருக்கு புகார் வந்ததை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து பைக்குகள் திருடு போன பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பைக்குகளை திருடிச்சென்றவரை தேடி வந்தனர்.
இந்த நிலையில் இளையரசனேந்தல் பகுதியில் டாஸ்மாக் கடையில் மது அருந்திவிட்டு வந்த சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டு இருந்த இளைஞர் ஒருவரை மேற்கு காவல் நிலைய போலீசார் பிடித்து விசாரணை நடத்தியதில் அந்த இளைஞர் இளையரசனேந்தல் அருகேயுள்ள குடப்பாறை பகுதியை சேர்ந்த கௌதம் (25) என்பதும், கொத்தவேலை பார்த்த கௌதம், இளையரசனேந்தல் பகுதியில் பைக்ககளை திருடியதும் தெரியவந்தது. இதையெடுத்து போலீசார் கௌதமை கைது செய்து 2 பைக்குகளை பறிமுதல் செய்தனர்.