கோவில்பட்டி அருகே துணி துவைத்துக் கொண்டிருந்த பெண்ணை தாக்கிய 3 பவுன் தங்க நகையை பறித்துச் சென்ற மர்ம நபர்!
2018ம் ஆண்டு அதே வீட்டில் 15பவுன் தங்க நகைகள் மற்றும் 20 ஆயிரம் ரொக்க பணம் திருடு போன சம்பவத்தில் இதுவரை குற்றவாளிகள் கண்டுபிடிக்க முடியாத நிலையில் 2 வதாக நகை பறிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் அருகே உள்ள தெற்கு இலந்தைகுளம் கிராமத்தை சேர்ந்தவர் சுடலைமணி. இவர் சென்னையில் வழக்கறிஞராக உள்ளார். இவரது மனைவி பூமாடத்தி(39). இவர் நிலையில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். சுடலை மணி சென்னையில் இருக்க பூமாடத்தி தனது இரண்டு குழந்தைகளுடன் தெற்கு இலந்தை குளத்தில் வசித்து வருகிறார். இவர்களது வீடு ஊரிலிருந்து கொஞ்சம் சற்று தள்ளி உள்ளது. நேற்றிரவு குழந்தைகள் அருகிலுள்ள கோவிலுக்கு சாமி கும்பிட சென்ற நிலையில் , வீட்டில் பூ மாடத்தி தனியாக இருந்து உள்ளார். வீட்டில் முன் பகுதியில் உள்ள திறந்தவெளி குளியல் அறையில் துணிகளை துவைத்து வீட்டு, வெளியே வர முயன்ற போது, அவரது கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க நகையை யாரோ ஒருவர் பிடித்து இழுத்து உள்ளார். குளியலறை ஒட்டி இருந்த மாடி படியில் இருந்து இழுத்துள்ளார். தனது நகையை பறிக்க விடாமல் இரண்டு கைகளாலும் பூமாடத்தி பிடித்துக் கொண்டு போராடியுள்ளார். ஆனால் அந்த மர்ம நபர் விடாது நகையை பறிக்க முயன்றது மட்டுமின்றி, மாடிப்படியில் இருந்து குளியலறைக்குள் குதித்து பூமாடத்தியை தாக்கி விட்டு நகையை பறித்துக் கொண்டு ஓடி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பூமாடத்தி அருகில் இருந்தவர்கள் மூலமாக கயத்தார் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் வழக்கு பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.
கடந்த 2018 ஆம் ஆண்டு இதை பூமாடத்தி வீட்டில் 15பவுன் தங்க நகைகள் மற்றும் 20 ஆயிரம் ரொக்க பணம் திருடு போனது. இது தொடர்பான வழக்கும் கயத்தாறு காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளது. இதுவரை இந்த வழக்கில் குற்றவாளி கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மர்ம நபர் ஒருவர் 3 பவன் தங்க நகையை பறித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.