கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்ட 3 எதிரிகள் கைது - 994 மதுபாட்டில்கள் பறிமுதல்!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் கோவில்பட்டி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. ஜெகநாதன் மேற்பார்வையில், கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு. நவநீதகிருஷ்ணன் தலைமையில் உதவி ஆய்வாளர் திரு. சண்முகம் மற்றும் போலீசார் கோவில்பட்டி ஸ்ரீராம்நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்களான இருளப்பசாமி (52), மணிகண்டன் (50) மற்றும் மனோஜ் (23) ஆகியோர் என்பதும், அவர்கள் சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.
உடனே மேற்படி போலீசார் எதிரிகளான இருளப்பசாமி, மணிகண்டன் மற்றும் மனோஜ் ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்த 994 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.