கமுதி அருகே பாதாள பேச்சியம்மன் கோவில் வடாந்திர வைகாசி பொங்கல் உற்சவம்!
மேளதாளம் இசை வாத்தியங்களுடன் பக்தர்கள் படைசூழ பூஜை பெட்டியுடன் பக்தர்கள் அக்னி சட்டி ஏந்திச் சென்று வழிபாடு !
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே இடைச்யூரணி கிராமத்தில் அமைந்துள்ள வல்லப கணபதி இருளப்பசாமி பாதாள பேச்சி அம்மன் மாரியம்மன் கோவில் வருடாந்திர வைகாசி பொங்கல் உற்சவ விழாவை முன்னிட்டு, மேளதாளம் இசை வாத்தியங்கள் வான வேடிக்கைகளுடன் பக்தர்கள் படைச்சூழ கோவில் பூசாரி பூஜையைப் பெட்டியை சுமந்து செல்ல பக்தர்கள் பால்குடம், அக்னி சட்டிகளை சுமந்து சென்று பாதாள பேச்சியம்மன் ஆலயத்தை வலம் சுற்றி சென்று பக்தர்கள் தங்களது நேத்தி கடன்களை நிறைவேற்றினர்.
அதனைத் தொடர்ந்து கருப்பணசாமி பாதாள பேச்சி அம்மன் உழவர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் தீபாதாரணை நடைபெற்றது ஏராளமான கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.