கமுதி அருகே  கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு கொடுமலூர் முருக கடவுளுக்கு அதிகாலையில் 21 சிறப்பு அபிஷேக அலங்கார தீபாதாரணை நடைபெற்றது.


ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே  கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு கொடுமல்லூர் முருக கடவுள் சுவாமிக்கு அதிகாலையில் பால், தயிர், மஞ்சள்,  சந்தனம், இளநீர், விபூதி, பஞ்சாமிர்தம், கும்ப நீர் உள்ளிட்ட 21 வகையான மூலிகை திரவிய சிறப்பு   அபிஷேக அலங்காரம் தீபாதாரணை வெகு விமர்சையாக   நடைபெற்றது.


முன்னதாக யாகசாலை பூஜை கணபதி ஹோமம் பூர்ணாகுதி மங்கல இசை வாத்தியங்களுடன் கோவில் நிர்வாக  பரம்பரை அறங்காவலர் ஆனந்த நடராஜன் முன்னிலையில் நவநீதகிருஷ்ணன் தலைமையிலான சிவாச்சாரியார்கள்  வேத மந்திரங்கள் முழங்க கும்ப ஆலய வலம் சென்று மூலவர் முருகக் கடவுள் சுவாமிக்கு அபிஷேக அலங்காரம் ஷோடச தீப பஞ்சமுக தீப தீபாதாரணை நடைபெற்றது. 



நடைபெற்ற விழாவில் கமுதி, முதுகுளத்தூர், பரமக்குடி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.