கமுதி அருகே 101 கிடாய்களை சுவாமிகளுக்கு பலியிட்டு சுடச்சுட 5 ஆயிரம் பக்தர்களுக்கு அசைவ அன்னதான விருந்து !


ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே இடைச்யூரணி கிராமத்தில் அமைந்துள்ள வல்லப கணபதி  இருளப்பசாமி பாதாள பேச்சி மாரியம்மன்  கோவில் வருடாந்திர வைகாசி பொங்கல் உற்சவ விழாவை முன்னிட்டு பக்தர்கள் சார்பில் வழங்கப்பட்ட 101 கிடாய்களை சுவாமிகளுக்கு பலியிட்டு 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்களுக்கு சுடச்சுட அசைவ அன்னதான பிரசாதம் வழங்கப்பட்டது. 


முன்னதாக இருளப்ப சுவாமி பாதாள பேச்சியம்மன் சுவாமிகளுக்கு அசைவ உணவு பிரசாதம் படையலிட்டு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடைபெற்றது. 


அதனைத் தொடர்ந்து கிடாய்களை பலியிட்டு சமையல் செய்த அசைவ உணவுவிற்கு சிறப்பு பூஜை தீபாதாரணை விபூதி திருநீர் தெளித்து பூஜைகள் செய்து பக்தர்கள் அசைவ உணவு பிரசாதமாக வழங்கப்பட்டது.

இதில் கமுதி சுற்றுவட்டார பகுதியிலிருந்து 5000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் அசைவ உணவு விருந்தில் பங்கேற்று சென்றனர்.