கமுதி அருகே புரட்டாசி மாத பொங்கல் உற்சவ திருவிழாவை முன்னிட்டு முளைப்பாரி வெகு விமர்சியாக நடைபெற்ற நகர்வலம் !


ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள உலக நடை சேகநாதபுரம் கிராமத்தில் அமைந்துள்ள தர்ம முனிஸ்வரர், சந்தன மாரியம்மன், கருப்பண்ணசாமி, சுள்ளக்கரை காளியம்மன், வாழவந்த அம்மன்,உள்ளிட்ட பரிகார தெய்வங்களுக்கு வருடாந்திர புரட்டாசி பொங்கல் உற்சவ விழாவை முன்னிட்டு, முளைப்பாரி ஊர்வலம் கரகாட்டம்,ஒயிலாட்டம்,வானவேடிக்கை, இசை வாத்தியங்கள் முழங்க உலகநடை சேகநாதபுரம் கிராம முக்கிய வீதிகளின் வழியாக ஏராளமான பெண்கள் தலையில் முளைப்பாரிகளை சுமந்தவாறு ,கிராம நகர்வலம் சென்று முளைப்பாரி ஊர்வலமாக சென்று கங்கை நீரில் கரைத்து வழிபாடு செய்தனர்.

முன்னதாக முளைப்பாரியை ஆலயத்தின் முன்பாக கீழே இறக்கி வைத்து முளைப்பாரி கும்மி பாட்டு பாடி மகிழ்ந்தனர்.