கமுதி ஆதிவராஹி அம்மன் சித்திரை மாத தேய்பிறை பஞ்சமி சிறப்பு அபிஷேக அலங்காரம் தீபாதாரணை!
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி மதுரை சாலையில் உள்ள அருள்மிகு ஸ்ரீ ஆதிவராகி அம்மன் ஆலயத்தில் மூலவர் ஆதிவராகி அம்மனுக்கு தமிழ் மாத சித்திரை பஞ்சமி தினத்தை முன்னிட்டு ஆதிவராகி அம்மனுக்கு பால்,தயிர், சந்தனம்,இளநீர்,பன்னீர்,விபூதி,பஞ்சாமிர்தம்,குங்குமம் உள்ளிட்ட 16 வகையான மூலிகை திரவிய சிறப்பு அபிஷேக அலங்காரம் சோடச தீப ஆராத்தி தீவாதாரணை நடைபெற்றது.
இந்த வழிபாடு நிகழ்வில் பங்கேற்ற பெண்கள் குடும்ப கஷ்ட சங்கடங்களை நிவர்த்தி செய்ய வேண்டி வாழைஇலையில் பச்சரிசியின் மீது தேங்காயில் நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர்.
பக்தர்கள் அனைவருக்கும் வராகி அம்மனுக்கு அபிஷேகம் செய்த மஞ்சள் சந்தனம் பிரசாதமாக வழங்கப்பட்டது.