கமுதி அருகே பக்தர்கள் அழகுவேல் சிறுவர்கள் சேத்தாண்டி வேடமனிந்தும் பெண்கள் 1008 பால்குடம் ஊர்வலம்:பெரிய நாச்சியம்மனுக்கு பாலாபிஷேகம்!  

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பம்மனேந்தல் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ குருநாத சுவாமி கோவில் 50 ஆம் ஆண்டு குருபூஜை விழா கடந்த 4ம் தேதி காப்பு கட்டு கொடியேற்றத்துடன் பத்து நாள் திருவிழா துவங்கியது.

திருவிழாவை முன்னிட்டு நாள்தோறும் குருநாத சுவாமி பெரிய நாச்சியம்மன் சித்தி விநாயகர் படர்ந்த புலி கற்பக விநாயகர் கரிசில் குளம் செல்வ விநாயகர் சுவாமிகளுக்கு நாள்தோறும் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் தீபாதாரணை நடைபெற்று வருகிறது.திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பெரிய நாச்சி அம்மன் சுவாமிக்கு குருநாதர் சுவாமி ஆலயத்தில் இருந்து பக்தர்கள் அழுகு வேல் எடுத்து சிறுவர்கள் செத்தாண்டி வேடம் அணிந்தும் 1008 பெண்கள் பால்குடங்களை மேளதாளம் இசை வாத்தியங்கள் வான வேடிக்கைகள் முழங்க பம்மனேந்தல் கிராமத்தின் முக்கிய வீதிகளின் வழியாக கிராம பரிபார தேவதைகள் சுவாமிகளை வலம் சுற்றி சென்று  நிறைவாக பெரியநாச்சி அம்மன் ஆலயம் சென்று மூலவர் பெரிய நாச்சி அம்மனுக்கு பாலாபிஷேகம் விமர்சியாக நடைபெற்றது.

இதில் பம்மனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.அனைவருக்கும் அறுசுவை உணவு அன்னதானம் வழங்கப்பட்டது நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பம்மனேந்தல் கிராம பொதுமக்கள் நிர்வாகிகள் செய்தனர்.