கமுதி அருகே புரவி எடுப்பு விழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம்!
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள வண்ணாங்குளம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அரியநாச்சி அம்மன் கோவில் 48-ஆம் நாள் மண்டல பூஜை விழா வருடாந்திர பொங்கல் உற்சவ விழா மற்றும் புறவி எடுப்பு விழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.
மூன்று பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில் மதுரை ராமநாதபுரம், திருநெல்வேலி,விருதுநகர்,சிவகங்கை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட ஜோடி மாட்டு வண்டிகள் போட்டியில் கலந்து கொண்டு இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்து சென்றன, போட்டியானது வண்ணாகுளம் to கமுதி சாலையில் தல 10, 8,6 கிலோமீட்டர் தூரம் நிர்ணயிக்கப்பட்டு போட்டியானது நடைபெற்றது.போட்டியில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர் மற்றும் ஓட்டிவந்த சாரதிகளுக்கு, விழாக்கமிட்டியின் சார்பாக ரொக்க பணம் மற்றும் குத்துவிளக்கு பரிசாக வழங்கி கௌரவிக்கப்பட்டது. நடைபெற்ற இந்த பந்தயத்தை சாலையின் இரு புறமும் நின்று ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கண்டு ரசித்தனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஏற்பாடுகளை வண்ணாங்குளம் கிராம பொதுமக்கள் நிர்வாகிகள் தேவரின் இதய தாமரை இளைஞர்கள் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.