கமுதியில் திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் !
கடந்த 2022-ம் ஏற்கனவே சொத்து வரி உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது திடீரென சொத்துவரி 6%q உயர்த்தப்பட்டுள்ளதை கண்டித்தும், 40 மாத காலமாக மக்கள் பல்வேறு இன்னல்களுக்குள்ளாக காரணமாக இருந்து வரும் திமுக அரசைக் கண்டித்தும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் உத்தரவின்படி, இன்று தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.இதன் ஒரு பகுதியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பேருந்து நிலையம் முன்பாக அதிமுக கமுதி தெற்கு மேற்கு ஒன்றிய கழக சார்பில் தமிழக அரசின் சொத்து வரி உயர்வு மின் கட்டண உயர்வு விலைவாசி உயர்வு சட்ட ஒழுங்கு பிரச்சினைகளை கண்டித்து கமுதி தெற்கு மேற்கு ஒன்றிய அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் நிறைகுளத்தான் தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் காளிமுத்து மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் கருமலையான்,மாவட்ட மாணவர் அணி துணை செயலாளர் பசும்பொன் தமிழ்வாணன் கமுதி நகரச் செயலாளர் மணி முருகன் உள்ளிட்ட கமுதி சுற்று வட்டாரா பகுதியை சார்ந்த 100க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் மனித சங்கிலி போராட்டத்தில் கலந்து கொண்டனர்.