ஓட்டப்பிடாரம் அருகே லாரி தீப்பிடித்து எறிந்ததில் ஓட்டுநர் உடல் கருகி உயிரிழப்பு!


கன்னியாகுமரி மாவட்டம் தேவாலை பகுதியை சேர்ந்த வெள்ளையன் (38) என்பவர் லாரி ஓட்டுனராக பணி செய்து வந்துள்ளார்.  ராதாகிருஷ்ணன் ராமநாதபுரத்தைச் சேர்ந்த முனியசாமி டிரான்ஸ்போர்ட் என்ற டிப்பர் லாரியில் டிரைவராக வேலை செய்து வந்துள்ளார். மேலும் டிப்பர் லாரியில் குறுக்கு சாலை பகுதியிலுள்ள தனியார் தார்  கம்பெனியிலிருந்து தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் சாலை அமைக்கும் பணிக்காக தார் எடுத்துச் செல்லும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில்  28-07-2024 ஞாயிற்றுக்கிழமை என்பதால் லாரிக்கு நடை இல்லாத காரணத்தினால்  ஓட்டப்பிடாரம் அருகே குறுக்குச்சாலை பகுதியில் உள்ள தனியார் தார் கம்பெனியில் டிப்பர் லாரியை நிறுத்திவிட்டு லாரியில் தூங்கியுள்ளார். இந்நிலையில் 29-07-2024 அதிகாலை 3 மணி அளவில் திடீரென லாரி தீப்பிடித்து எரிந்ததாக கூறப்படுகிறது.  இதுகுறித்து ஓட்டப்பிடாரம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.