தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது விளாத்திகுளம் சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்த ஜெயபெருமாள் என்பவரின் மகன் செல்வமாணிக்கம் (23), என்பவர் சாலையில் வருபவர்களிடம் மது போதையில் அவதூறாகப் பேசி தகராறு ஈடுபட்டுள்ளார். இதனைஅடுத்து விளாத்திகுளம் போலீசார் செல்வமாணிக்கத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர், செல்வ மாணிக்கத்தின் மீது ஏற்கனவே விளாத்திகுளம் காவல் நிலையத்தில் நான்கு வழக்குகளும், கோவில்பட்டி காவல் நிலையத்தில் ஒரு வழக்குகளும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
குற்றம்
மது போதையில் தகராறு ஈடுபட்டவர் கைது.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தேர்தலையொட்டி மேலகரந்தை சோதனைச்சாவடியில் பறக்கும் படையினர் தீவிர வாகனச்சோதனை!
அடுத்த
வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பயிற்சி முகாம்!