தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம், எட்டையபுரம், கோவில்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இந்தாண்டு பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோளம் பயிர்களை காட்டுப்பன்றிகள் மற்றும் மான்கள் பெருமளவில் சேதப்படுத்தி நாசம் செய்து வருகின்றன. இது பற்றி விவசாயிகள் பலமுறை மாவட்ட நிர்வாகத்திடமும், ஆட்சியாளர்களிடமும் கோரிக்கை வைத்தும் தற்போது வரை எந்த ஒரு பலனும் இல்லை என்று குற்றச்சாட்டு வைக்கின்றனர். இந்த நிலையில் இன்று எட்டையபுரம் அருகே உள்ள மேலநம்பிபுரம், முத்தலாபுரம், ராசாப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் காட்டுப்பன்றிகளினால் சேதமடைந்த பயிர்கள் மற்றும் படைப்புழு தாக்கத்தை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் ஆய்வு மேற்கொண்டார். இதில் வேளாண்மை துறை இணை இயக்குநர், வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர்கள், வனத்துறை அதிகாரிகள், புள்ளியியல் துறை அலுவலர்கள், வருவாய் துறையினர் மற்றும் துறைசார்ந்த அலுவலர்கள், பணியாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இவ்வாறு அதிகாரிகள் புடைசூழ சேதமடைந்த மக்காச்சோளம் பயிர்களை ஆய்வு செய்த சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், அப்பகுதி விவசாயிகளிடம் காட்டுப்பன்றிகளை முற்றிலுமாக ஒழிக்க வனத்துறை அதிகாரிகளுடன் சேர்ந்து முழு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எம்.எல்.ஏ மார்க்கண்டேயன்,   * விளாத்திகுளம் தொகுதியில் பல்வேறு பகுதிகளில் காட்டுப்பன்றிகள், மான்கள், முயல்களும் பல்லின பெருக்கமாக இங்கு வந்து விவசாய நிலங்களை அளித்திருப்பதை வேளாண்மைத் துறை இணை இயக்குனர், துணை இயக்குனர், தோட்டக்கலை மற்றும் புள்ளியல் துறை அதிகாரிகள், செட்டிகுளம் வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பூச்சியியல் துறை பேராசிரியர்கள், வருவாய் துறை அதிகாரிகள், வனத்துறை அதிகாரிகள் என ஒட்டுமொத்த அரசு இயந்திரமே வந்து ஆய்வு செய்து விவசாயிகளின் குறைகளை தீர்க்க வந்துள்ளோம்.. மேலும் இப்பகுதி விவசாயிகளின் பிரச்சனைகள் மற்றும் பயிர்களின் நிலையை சட்டமன்ற உறுப்பினர் - அனைத்து துறை சார்ந்த அதிகாரிகளின் கூட்டு அறிக்கையாக தயார் செய்து தமிழக முதல்வரிடம் சமர்ப்பணம் செய்து இப்பகுதி விவசாயிகளுக்கு தேவையான நிவாரணத்தை பெற்றுக் கொடுப்பேன் என்று உறுதி அளித்துள்ளார்.கேரள மாநிலத்தைப் போல தமிழகத்திலும் காட்டு பன்றிகளை சுட்டுக் கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா என்று கேட்டதற்கு..?* இதை மாநிலம் சார்ந்த பிரச்சினையாக பார்க்க முடியாது... இது மத்திய அரசு சார்ந்த பிரச்சினை.* இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்ற வேண்டும்.* அதுமட்டுமன்றி, இந்த காட்டுப்பன்றிகள் பிரச்சினை தொடர்பாக நாடாளுமன்றத்துக்கு எடுத்துச்செல்ல தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியை வலியுறுத்துவோம் என்றும்,* எந்த மாநில அரசு ஒரு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துகிறதோ அதை தமிழ்நாடு அரசு முன் நின்று நடத்தி வலுசேர்க்கும் என்று தெரிவித்தார். பல்வேறு விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டயேன்,அதேபோல் விவசாயிகளுக்கு  கொடுத்த வாக்குறுதியை விரைவாக நிறைவேற்ற வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது...