கோவிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியபோது நேர்ந்த சோகம்: எட்டையபுரம் தேசிய நெடுஞ்சாலையில் கார் மரத்தில் மோதி கோர விபத்து : வழக்கறிஞர்கள் உட்பட 2 பேர் பலி - 4 பேர் படுகாயம்! திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த சின்னச்சாமி மகன் லட்சுமணன் (75), வழக்கறிஞராக பணியாற்றி வரும் இவர் நேற்று தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே தேரிக்குடியிருப்பில் அமைந்துள்ள கற்குவேல் அய்யனார் கோவிலுக்கு சாமி கும்பிட தனது காரில் குடும்பத்துடன் சென்றுள்ளனர். இதைத்தொடர்ந்து சாமி தரிசனம் செய்து விட்டு இன்று காரில் ஊருக்கு திரும்பிக்கொண்டிருக்கும் போது, தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் விளாத்திகுளம் அருகே உள்ள கோடங்கிபட்டி பகுதியில் சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் திடீரென நிலை தடுமாறி சாலையின் நடுவில் இருக்கும் சென்டர் மீடியனைத் தாண்டி அப்பகுதியில் சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் வழக்கறிஞர் லட்சுமணன் மற்றும் காரை ஓட்டி வந்த டிரைவர் ராஜேந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் காரில் வந்த கதிர், சுலேக்சனா, மஞ்சூரி மற்றும் நந்தன் ஆகிய 4 பேரும் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மாசார்பட்டி காவல் நிலைய போலீசார் விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் உயிரிழந்தவர் இருவரின் உடலைகளையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி இந்த விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விபத்து
கோவிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியபோது சோகம் - வழக்கறிஞர்கள் உட்பட 2 பேர் பலி - 4 பேர் படுகாயம்!
Admin
1 நிமிட வாசிப்பு
இதையும் படிக்கலாம்
3 ஆண்டுகள் சிறை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்!
20 Jul 2026
அரசு மதுபான கடையை மூடக்கோரி அமைச்சர் ஸ்ரீ நாத்திடம் மனு அளித்த குளத்தூர் பகுதி மக்கள்!
18 Jul 2026
மாட்டு வண்டி எல்கை பந்தயம்:சீறிப்பாய்ந்த 52 ஜோடி மாடுகள்!
18 Jul 2026
வெட்டாதே! வெட்டாதே! மரத்தினை வெட்டாதே: நெடுஞ்சாலைத்துறைக்கு கண்டனம்!
17 Jul 2026