விளாத்திகுளம் அருகே சாலை விபத்தில் ஒருவர் பலி
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேலிடுபட்டி கிராமத்தை சேர்ந்த நாகுரெட்டி என்பவரின் மகன் பெருமாள் என்ற பொண்ணு (50) இவர் விளாத்திகுளத்தில் இருந்து தனது இருசக்கர வாகனத்தில் வேலிடுபட்டி கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தபோது, விளாத்திகுளம் அருகே உள்ள சின்னையாபுரம் கிராமத்தை சேர்ந்த பிரவீன்குமார் மற்றும் அஜய்குமார் ஆகியோர் இருவரும் ஒரே இருசக்கர வாகனத்தில் விளாத்திகுளத்தில் இருந்து கோவில்பட்டிக்கு சென்று கொண்டிருந்தனர், சித்தவநாயக்கன்பட்டி ஆர்ச் அருகே சென்று கொண்டிருந்தபோது பெருமாள் என்ற பொண்ணு சென்ற வாகனத்தின் மீது பிரவீன் குமார் (19) அஜய் குமார்(20) சென்ற இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் , பெருமாள் என்ற பொண்ணுக்கு பலத்த காயம் ஏற்பட்டது, இதனை எடுத்து 108 வாகனம் மூலம் தூத்துக்குடி திருச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்ட பெருமாள் என்ற பொண்ணு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.