தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் தெற்கு ரத வீதியைச் சேர்ந்த கனகசபாபதி (60), கனகசபாபதி ஆடு மேய்க்கும் தொழில் செய்து வந்துள்ளார்இந்நிலையில் எட்டையாபுரம்-தூத்துக்குடி சாலையில் ஆடுகளை மேய்த்துக்கொண்டு சாலையைக் கடக்க முயன்ற போது எதிர்பாராத விதமாக கார் மோதி விபத்துக்குள்ளானது, இதில் கனகசபாபதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார், இது குறித்து தகவல் அறிந்த எட்டையாபுரம் காவல் நிலைய போலீசார் கனகசபாதியின் உடலை எட்டையாபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத ஆய்வுக்காக அனுப்பி வைத்து, இதுகுறித்து எட்டயபுரம் போலீசார் விபத்து ஏற்படுத்திய நீராவி புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்த மொட்டையசாமி மகன் கண்ணன்(39) என்பவரை பிடித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.