விளாத்திகுளம் பகுதி இளைஞர் சாலை விபத்தில் உயிரிழப்பு.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வவ்வால் தொத்தி கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் மாரிபாண்டியன் (39), இவர் வேலைப் பணி காரணமாக தூத்துக்குடியில் இருந்து நெல்லைக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, முறப்பநாடு அருகே நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் மாரிபாண்டியன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து முறப்பநாடு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.