விளாத்திகுளம் அருகே திருமணம் ஆகாத விரக்தியில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள இளம்புவனம் கிராமத்தை சேர்ந்த செல்லையா என்பவரின் மகன் சுந்தர்ராஜ் (29), இவர் பந்தல் அமைக்கும் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கு பல நாட்களாக பெண் தேடியும் கிடைக்காததால் மனவிருக்தியில் இருந்த சுந்தர்ராஜ் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார், இதுகுறித்து எட்டையாபுரம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.