விளாத்திகுளம் அருகே குடும்ப பிரச்சினை காரணமாக சுவரில் முட்டி இளைஞர் உயிரிழப்பு.



தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சிங்கிலிபட்டி கிராமத்தை சேர்ந்த (மாட்டு RACE )சக்கயா என்பவரின் மகன் சதீஷ்குமார் (29), இவருக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகி இரண்டு ஆண் குழந்தைகள் உள்ள நிலையில்,12-12-2024 வியாழக்கிழமை குடும்ப பிரச்சினை காரணமாக குடிபோதையில் இருந்த சதீஷ்குமார் வீட்டு வாசலில் இருந்த சுவரில் பலமுறை முட்டியதில் நெற்றியில் காயம் ஏற்பட்டு காது வழியாக ரத்தம் வந்ததாக கூறப்படுகிறது, இதனை அடுத்து வீட்டில் உள்ளோர், கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்குசிகிச்சைக்கு அனுமதித்தனர், இந்நிலையில் சிகிச்சைபலனின்றி  14-12-2024 சனிக்கிழமை மதியம் சதீஷ்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து எட்டயபுரம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.