விளாத்திகுளம் அருகே தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட இளைஞர் கைது!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள தூத்துக்குடி மாவட்ட எல்லை பகுதியான சென்னமரெட்டிபட்டி சோதனை சாவடியில் போலீசார் 11-06-2026 வியாழக்கிழமை அதிகாலை தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர், அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த ஒரு இளைஞரை நிறுத்தி சோதனை செய்ய முயன்ற போது அந்த இளைஞர், போலீசாரிடம் முன்னுக்கு பின் முரணாக பேசியதால், சந்தேகம் அடைந்த போலீசார் அவரை விசாரணை செய்த போது, அவர் எடுத்து வந்த இருசக்கர வாகனம் விளாத்திகுளம் மீரான் பாளையம் தெருவை சேர்ந்த சரவணபெருமாள் என்பவரின் இருசக்கர வாகனத்தை திருடி வந்தது விசாரணையில் தெரியவந்தது.
இதனை அடுத்து இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட விளாத்திகுளம் அருகே உள்ள ஓ.துறைச்சாமிபுரம் கிராமத்தை சேர்ந்த அழகர்சாமி என்பவரின் மகன் முனியசாமியை (28)கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
முனியசாமி ஏற்கனவே கோவில்பட்டி, சங்கரலிங்கபுரம் உள்ளிட்ட காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மூன்றுக்கு மேற்பட்ட இருசக்கர வாகனங்களை திருடிய வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.