விளாத்திகுளத்தில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை?
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பகுதியை சேர்ந்த கருப்பசாமி(40) இவரது மனைவி பொன்மணி (34), இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கருப்பசாமி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் மளிகை கடை நடத்தி வந்துள்ளார், மளிகை கடையில் பெரிய நஷ்டம் ஏற்பட்டதால், அங்கிருந்து தூத்துக்குடிக்கு வந்து ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்துள்ளார். அதனைத் தொடர்ந்து பணி மாறுதல் காரணமாக சில நாட்களுக்கு முன்பு விளாத்திகுளத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.
தனது குடும்பத்துடன் அம்பாள் அம்பாள் நகரில் ஒரு வீட்டினை வாடகைக்கு எடுத்து வசித்து வந்துள்ளார். சென்னையில் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக கணவன் மனைவியிடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் 19-06-2024 புதன் கிழமை மாலை 4 மணியளவில் வீட்டில் பொன்மணி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை அடுத்த தகவல் அறிந்த விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் பொன்மணி உடலை மீட்டு பிரேத ஆய்வுக்காக அனுப்பி வைத்து, பொன்மணி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட காரணம் என்ன என்பது குறித்து? வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.