விளாத்திகுளம் அருகே கோவில் திருவிழாவை பெண்களின் வேளாண்கும்மி மற்றும் மாரிகும்மி கும்மி: கரகம் மற்றும் கோலாட்டத்துடன் நடைபெற்ற பெண்களின் கும்மியாட்டத்தை கண்டு ரசித்த ஏராளமான பொதுமக்கள்!
தமிழர்களின் தொன்மையான பாரம்பரிய கலைகளில் கும்மி நடனம் ஒன்றாகும், சங்க இலக்கியத்தில் குறவைக்கூத்து அழைக்கப்பட்ட கொம்மி நடனம், பெண்கள் வட்டமிட்டு கூடி அடித்ததால், நாளடைவில் அது கும்மி என்று அழைக்கப்பட்டது, கும்மிகள் பூந்தட்டு கும்மி,முளைப்பாரி கும்மி,வள்ளிகும்மி, வேளாண் கும்மி, மாரிகும்மி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு வகையான கும்மிகள் நடைபெற்று வருகிறது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கந்தசாமிபுரம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் கோவில் வைகாசி மாத பொங்கல் உற்சவத்தை முன்னிட்டு,மாரி மழை பெய்யவும்,விவசாயம் செலிக்கவும் அக்கிராமத்தில் உள்ள சிறுமிகள் முதல் இளம் பெண்கள் வரை ஒரே சீருடையில் அம்மன் பாடல்கள் முருகன் பாடல்கள் கருப்பசாமி பாடல்கள் உள்ளிட்ட சினிமா பாடல்களுக்கு கரகம் எடுத்தும், கோலாட்டக் குச்சி அடித்தும்,தீச்சுடம் ஏற்றி,வேப்பிலை உள்ளிட்ட இசைக்கருவிகளை வைத்தும் வட்டமாகவும் பல்வேறு கோணங்களிலும் சிறப்பாக வேளாண் மற்றும் மாரி கும்மிகள் அடித்து சிறப்பித்தனர்,இதை ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்,இறுதியில் விழா கமிட்டி சார்பாக கும்மியடித்த பெண்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.