விளாத்திகுளம் அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை : போலீசார் வழக்கு பதிவு?

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் - துரைச்சாமிபுரம் கிராமத்தை சேர்ந்த  செல்வராஜ் என்பவரின் மகள் மாரியம்மாள் (40), இவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது, இதனால் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பார்த்தும் பலன் பெறாத நிலையில், மனவிரக்தியில் இருந்து வந்த  மாரியம்மாள் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில்  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார், இது குறித்து தகவல் அறிந்த காடல்குடி   காவல் நிலைய போலீசார் மாரியம்மாளின் உடலை மீட்டு பிரேத ஆய்வுக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாரியம்மாளுக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.