விளாத்திகுளம் அருகே சீமை கருவேல மரங்கள் சூழ்ந்த சாலையால் 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதிப்பு!
இன்னும் 4 நாட்களில் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளி,கல்லூரி வாகனங்கள் செல்ல முடியாத அவல நிலை.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள காடல்குடி முதல் புதூர் வரை உள்ள சாலை மிகவும் மோசமாகவும் இருபுறமும் சீமை கருவேல மரங்கள் சூழ்ந்து இருப்பதால், சாலையை சீரமைத்து சீமைகருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று பல மாதங்களுக்கு முன்பு அப்பகுதி மக்கள் செய்திகள் வாயிலாக கோரிக்கை விடுத்தனர், கோரிக்கையை ஏற்று அப்போதைய திமுக அரசு "கண்துடைப்புக்காக" சிறிது தூரம் மட்டும் சாலைகள் அமைத்து இருபுறம் உள்ள சீமைகருவேல மரங்களை அகற்றினர்.
ஆனால் பெரும்பாலான சாலை பகுதிகள் சரி செய்யப்படாமலும், சீமைகருவேல மரங்கள் அகற்றாமல் இருப்பதால், இருசக்கர வாகனங்கள் கூட விலகி செல்ல முடியாமல் உள்ளது அதேபோல், இன்னும் நான்கு நாட்களில் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் அந்தசாலை வழியாகத்தான் தனியார் கல்லூரி வாகனங்கள்,பள்ளி வாகனங்கள்,அவசர உதவிக்கு 108 வாகனங்கள் அன்றாட செல்லும் பிரதான சாலையாகும்,அதே போல் கர்ப்பிணிப்பெண்கள் பூதலாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாமலும் தவித்து வருகின்றனர்.
எனவே இந்தசாலையில் உள்ள சீமைகருவேல மரங்களை அகற்றி சாலையை சரி செய்ய வேண்டும் என்று பி.ஜெவீரபுரம்,புதுச்சின்னையாபுரம், சேர்வைக்காரன்பட்டி,கந்தசாமிபுரம், மாதலாபுரம், வெங்கடாசலபுரம், L.V.புரம், கழுகாசலபுரம், உத்தண்டாபுரம், பூதலாபுரம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மேற்பட்ட கிராம மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூய ஆட்சி என்று கூறும் தற்போதைய அரசு கடந்த திமுக அரசை விட "துப்பு கெட்ட" ஆட்சியாக இருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
பேட்டி : பெருமாள்சாமி - சமூக ஆர்வலர்.