விளாத்திகுளம் அருகே உள்ள கடலையூரில் வெள்ளையனே வெளியேறு இயக்க போராட்ட நினைவு தினம் :தியாகிகளின் நினைவு ஸ்தூபிக்கு மரியாதை!


கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் கடலையூரில் 83வது வெள்ளையனே வெளியேறு இயக்க போராட்ட நினைவு தினத்தை முன்னிட்டு தியாகிகளின் நினைவு ஸ்தூபிக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.




1942 ம் ஆண்டு ஆகஸ்ட் 8ம் தேதி மும்பையில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் மகாத்மா காந்திஜீ  ஆங்கிலேய அரசை அடிபணிய வைக்க செய் அல்லது செத்து மடி எனும் முழக்கமிட்டு வெள்ளையனே வெளியேறு எனும் ஒத்துழையாமை இயக்கத்தை துவக்கி வைத்தார்

அன்று முதல் நாடு முழுவதும் போராட்டம் தீவிரமடைந்தது

போராட்டத்தின் விளைவாக கடலையூரில் ஆகஸ்ட் 22ம் தேதி வெயிலுகந்த முதலியார் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தின் போது ஆங்கிலேய அரசால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதில் சங்கரலிங்க முதலியார் சம்பவ இடத்திலேயே பலியானார்.

மாடசாமி முதலியாருக்கு இடுப்பில் குண்டு பட்டு வெளிவந்தும். ராமசாமி முதலியாருக்கு கட்டை விரலில் குண்டு பட்டு துண்டாகியும் படுகாயமடைந்தனர். மேலும் ஆங்கிலேய அரசால் நெசவு நூல் மற்றும் பாவுகள் அடித்து நொறுக்கப்பட்டன

போராட்டத்தில் 34 தியாகிகள் கலந்து கொண்டனர்

இவர்களின் தியாகத்தை போற்றும் வகையில் கடலையூரில் நினைவுஸ்தூபி அமைக்கப்பட்டு  மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.


இதில் கோவில்பட்டி ரோட்டரி சங்க தலைவர் ராஜ்குமார் தலைமையில் சங்க நிர்வாகிகள் விநாயகா ரமேஷ்,சீனிவாசன்,முத்துச்செல்வம்,நாராயணசாமி,கண்ணன்,முத்து முருகன், பூல்பாண்டி, முன்னாள் பஞ். தலைவர் மாரிச்சாமி உள்ளிட்டோர் தியாகிகளின் நினைவு ஸ்தூபிக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்து தியாகிகளின் தியாகத்தை நினைவு கூறவும்,தியாக மனப்பான்மையை  அனைவரிடமும் கொண்டு செல்லவும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.