விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய பகுதிகளில் ரூ.147.76 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட பணிகள் தொடக்கம்!



தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தெற்கு ஊராட்சி ஒன்றிய பூசனூர் ஊராட்சி வடமாலை சமுத்திரம் கிராமத்தில் அங்கன்வாடி மையம் கட்டிடம் கட்டுவதற்கான பணியையும் பூசனூர் ஊராட்சியில் பேவர் பிளாக் சாலை மற்றும் சிமெண்ட் சாலை அமைப்பதற்கான ரூபாய் 94.76 லட்சம் மதிப்பீட்டில்  பணியினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டில் பணிகளைத் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து புளியங்குளம் ஊராட்சி அரசங்குளம் கிராமத்தில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூபாய் 54 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய நலக்கூடம் கட்டுவதற்கான பணியினையும் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டில் கட்டுமான பணியினை தொடங்கி வைத்தார்.


இந்நிகழ்வில்  விளாத்திகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரஞ்சித்,தங்கவேல் விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல், விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், ஒப்பந்ததாரர் சுர்ஜித்,புளியங்குளம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலட்சுமி ராஜகோபால் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.