" விஜயகாந்த் பாட்டு போட்டாலே ஆடுவோம் " : விஜயகாந்த் பாடலுக்கு உணர்ச்சி பெறுக ஆட்டம் போட்ட பொதுமக்கள் மற்றும் தேமுதிக கட்சியினர்!
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளம் தேடி இல்லம் நாடி கேப்டன் ரத யாத்திரை என்ற பெயரில் தமிழகம் முழுவதும் பரப்புரை மேற்கொண்டு வருகிறார், அந்த வகையில் இன்று தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு பரப்புரை மேற்கொள்ள வருவதற்கு முன்பாக தேமுதிக கட்சியினர் சார்பில் ஒலிபெருக்கியில் வந்த விஜயகாந்தின் பட சினிமா பாடல் அனைத்து பாடல்களுக்கும் தேமுதிக கட்சியினர் மற்றும் பொதுமக்கள் தங்களை மெய் மறந்து மணிக்கணக்காக உற்சாகத்துடன் உணர்ச்சி பெறுக தொடர்ந்து நடனம் ஆடினர், அதனைத் தொடர்ந்து விளாத்திகுளம் ஆற்றுப்பாலத்தில் இருந்து கேப்டன் ரதயாத்திரை உடன் தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்த பிரேமலதா விஜயகாந்த் இருக்கு கட்சி நிர்வாகிகள் விஜயகாந்த் பாடலுடன் ஆட்டம் பாட்டத்துடன் உற்சாகத்துடன் வரவேற்பு அளித்தனர்.