கழிவு நீர் வெளியே செல்ல முடியாமல் கட்டப்பட்ட புதிய கால்வாய்:குளம் போல் தேங்கியுள்ள கழிவு நீரால் நோய் தொற்று பரவும் அபாயம்!
மக்கள் வரிப்பணம் வீணடிப்பு : விளாத்திகுளம் பேரூராட்சி நிர்வாகம் அலட்சியம்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேரூராட்சிக்குட்பட்ட13-வது வார்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 17 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய கழிவு நீர் கால்வாய் அமைக்கும் மற்றும் கால்வாயை மூடும் பிளேட் ஆகியவை டெண்டர் ஒதுக்கப்பட்டு பணி பூமி பூஜை செய்து பணிகள் தொடங்கப்பட்டு, தற்போது கழிவு நீர் கால்வாய் மட்டும், கட்டப்பட்டு பணிகள் முடிவடைந்த நிலையில், தற்போதுகட்டப்பட்ட புதிய கழிவுநீர் கால்வாயும், முறையாக அமைக்கப்படாததால் கழிவுநீர் வெளியே செல்ல முடியாமல் கால்வாய்க்குள்குளம் போல் தேங்கி உள்ளது.
கடந்த ஒரு வாரமாக பெய்த தொடர்மழையின் காரணமாக மழைநீர் கழிவு நீரில் கலந்து கழிவு நீரின் அளவு குளம்போல் அதிகரித்துள்ளதால், அப்பகுதி மக்கள் கொசுத்தொல்லை மற்றும் நோய் தொற்று பரவும் அபாயத்தில் தங்களின் அன்றாட வாழ்க்கையை கழித்து வருகின்றனர்.
இதுகுறித்து விளாத்திகுளம் பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் பேரூராட்சி நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர், எனவே பொதுமக்களின் சுகாதாரத்தை கவனத்தில் கொண்டு,மக்களின் பணத்தை வீணடிக்காமல் கட்டப்பட்ட கழிவு நீர் கால்வாயை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.