திராவிட மாடல் ஆட்சி தொடர மீண்டும் வாக்களியுங்கள் உதயசூரியன் சின்னத்திற்கு: இறுதி கட்டப்பிரச்சாரத்தில் எம்.எல்.ஏ மார்கண்டையேன்!
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் தற்போதைய விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் இடைச்சியூரணி, வாதாளக்கரை,கீழகல்லூரணி,மேலக்கல்லூரணி,கே. துரைச்சாமிபுரம், மடத்துப்பட்டி, நமச்சிவாயாபுரம், சுப்புலாபுரம், அகிலாண்டபுரம்,ஸ்ரீரங்கபுரம், குமரட்டையாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உதயசூரியன் சின்னத்திற்கு தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது மார்கண்டயேன் பேசுகையில் பள்ளி குழந்தைகளுக்காக காலை உணவு திட்டம், மகளிர் உரிமைத்தொகை,மகளிர் விடியல் பேருந்து,நலம்காக்கும் ஸ்டாலின்,மக்களை தேடி மருத்துவம்,தமிழ் புதல்வன் திட்டம் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்களை அள்ளித்தந்த திராவிடம் மாடல் ஆட்சி தொடர மீண்டும் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களியுங்கள்.
விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதியில் சாலைக்கு குடிநீர் தெருவிளக்கு உள்ளிட்ட பல்வேறு மக்களின் அடிப்படை வசதிகளை கடந்த ஐந்தாண்டுகளாக பொதுமக்களுக்கு சிறப்பாக செய்துள்ளேன். 
திமுக கடவுளுக்கு எதிரான கட்சி அல்ல, கடவுளின் பெயரைச் சொல்லி ஏமாற்றுபவர்களுக்கு எதிரான கட்சி எனத் தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.
இந்நிகழ்வில் புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.