கீழ ஈரால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.56.40லச்சம் மதிப்பீட்டில் சுகாதார மைய கட்டிட பணிகளை அடிக்கல் நாட்டி துவக்கி வைத்த விளாத்திகுளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கீழ ஈறால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.56.40- லட்சம் மதிப்பீட்டில் புதிய சுகாதார மைய கட்டிட கட்டுமான பணிகளை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் அடிக்கல் நாட்டி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் கிராம பொதுமக்கள்,வட்டார மருத்துவ அலுவலர் உமா செல்வி கோவில்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஷ்குமார் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்கள், மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், விளாத்திகுளம் தொகுதி திமுக சமூக வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.